மதுரையில் ரூபாய் 325 கோடி செலவில் கட்டப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைப்பதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) இன்று அதாவது 2025 அக்டோபர் 9ம் தேதி மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் தோனி தரையிறங்கியதும், அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அப்போது, பலத்த ஆரவாரத்துடனும் கைதட்டலுடனும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினரால் கூட்டத்தின் வழியாக தோனி பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். தோனி ஒரு சாதாரண கருப்பு டி-சர்ட் மற்றும் அவரது டிரேட்மார்க் சன்கிளாஸை அணிந்து கூட்டத்தினரை நோக்கி கையசைத்து அவரக்ளின் அன்பையும் மரியாதையும் ஏற்று கொண்டார்.
ALSO READ: விருது விழாவில் தோனியை போல் மிமிக்ரி.. குலுங்கி குலுங்கி சிரித்த ரோஹித் சர்மா.. ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!
திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடிய எம்.எஸ்.தோனி:Ms Dhoni played few balls after inaugurates the cricket stadium at Madurai 😍🔥#Msdhoni pic.twitter.com/jSzF01LCWV
— Saanvi 🍂 (@SaanviLaddal)
எம்.எஸ்.தோனி ஸ்டேடியத்திற்குள் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க சிவப்பு கம்பளம் விரித்து அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து, வாணவேடிக்கைகளுடன் ஸ்டேடியத்திற்குள் ஏராளமான ரசிகர்கள் கூடி, தோனி மைதானத்திற்குள் வருவதை கண்டு ஆரவாரம் செய்தனர். கிரிக்கெட் ஸ்டேடியத்தின் முன் பகுதியில் ரிப்பனை வெட்டி திறந்து வைத்த எம்.எஸ்.தோனி, பந்துவீச்சாளர்கள் வீசிய சில பந்துகளை எதிர்கொண்டு விளையாடினார்.
MS Dhoni at Madurai for Inauguration of New International cricket stadium 💥👏🔥 #MSDhoni pic.twitter.com/kOJLZD92OP
— deepaktweets (@deepak_u11)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து வேலம்மாள் கல்வி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம், சுமார் ரூபாய் 325 கோடி செலவில் கட்டப்பட்ட ஒரு அதிநவீன வசதி ஆகும். தற்போது, இந்த ஸ்டேடியத்தில் 7,200 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதை 20,000 இருக்கைகளாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ALSO READ: கிரிக்கெட்டில் அழுத்தத்தின் கீழ் ஓய்வு? உண்மையை உடைத்த அஸ்வின்!
இந்த மைதானத்தில் சிறப்பு மையம், பிரத்யேக பயிற்சி வலைகள், நவீன வெள்ள விளக்குகள் மற்றும் மேம்பட்ட வடிகால் வசதிகள் உள்ளன. இது TNPL, ரஞ்சி டிராபி மற்றும் IPL போட்டிகளை நடத்தத் தயாராக உள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த ஸ்டேடியமான சேப்பாக்கத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக இது உருவெடுத்தது.