குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!
WEBDUNIA TAMIL October 10, 2025 10:48 PM

இன்று காலை விலை குறைந்து விற்பனையான தங்கம் மாலைக்குள் மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.

சமீபமாக உலகளாவிய பொருளாதார காரணிகளால் தங்கம் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 1ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் சவரன் ரூ.87,600க்கு விற்பனையாகி வந்த நிலையில் வேகமாக விலையேறி 8ம் தேதியன்று 91,080 ஆக உயர்ந்தது. நேற்று மேலும் உயர்ந்து ரூ.91,400 ஆக விற்பனையானது.

இன்று காலை 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1320 குறைந்து ரூ.90,080க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில், அதற்கு மாலையில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.90,720 ஆக விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.11,340 ஆக விற்பனையாகி வருகிறது.

24 காரட் தங்கம் சவரன் ரூ.98,960க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி நேற்றை விட கிராமுக்கு ரூ.7 உயர்ந்து கிராம் ரூ.184க்கு விற்பனையாகி வருகிறது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.