இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது.
மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. இந்த விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை தான் தாறுமாறாக எகிறி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.184-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.