இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்று அதாவது 2025 அக்டோபர் 11ம் தேதி தனது 32வது பிறந்தநாளை முன்னிட்டு பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில்,ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஒரு பெண்ணுடன் புகைப்படமும் இருந்ததால், அவர் மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாக தெரிகிறது. நடாஷாவை பிரிந்த பிறகு, அவரது வாழ்க்கையில் ஒரு புதிய பெண் நுழைந்துள்ளார். இதன்மூலம், ஹர்திக் பாண்ட்யா தனது காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா காதலிக்கும் பெண் யார்..?ஹர்திக் பாண்ட்யா தனது பிறந்தநாளுக்கு சற்று முன்பு, 24 வயது மாடல் மஹிகா சர்மாவுடனான தனது காதலை அறிவித்தார். இருவரும் கடற்கரையில் ஒன்றாக இருக்கும்படியான ஒரு காதல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர். வைரலாகும் புகைப்படத்தில் ஹர்திக் பாண்ட்யா தனது புதிய காதலில் மஹிகா சர்மாவுடன் கடற்கரையில் இருப்பதையும், தோளில் கையை வைத்துக்கொண்டு கடலின் அழகிய காட்சியை ரசித்து கொண்டிருந்தனர்.
ALSO READ: டாப் 4க்குள் இடம்பிடித்த தென்னாப்பிரிக்கா.. இந்திய அணிக்கு எந்த இடம்.. புள்ளிகள் பட்டியல் நிலவரம் இதோ!
முன்னதாக, ஹர்திக் பாண்ட்யா தனது மகன் அகஸ்தியா, தாய் மற்றும் பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சில புகைப்படங்களையும், பிறந்தநாள் கேக்கின் புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார். நேற்று அதாவது 2025 அக்டோபர் 10ம் தேதி அதிகாலை மும்பை விமான நிலையத்திலிருந்து ஹர்திக் பாண்ட்யா மற்றும் மஹிகா சர்மா வெளியேறும் புகைப்படங்கள் வெளிவந்த சிறிது நேரத்திலேயே இந்த பதிவுகள் வெளிவந்தன. அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையணிந்து, இருவரும் ஒன்றாக நடந்து சென்றனர்.
ALSO READ: இந்திய அணி அரையிறுதிக்கு எவ்வாறு தகுதி பெற முடியும்? பாதை எளிதா?
யார் இந்த மஹிகா சர்மா..?Hardik pandya celebrating a new year in style 🗿🔥
Look at that swagg 😎👊#HardikPandya pic.twitter.com/EPATNsRbvY
— Saanvi 🍂 (@SaanviLaddal)
ஹர்திக் பாண்ட்யாவை விட 7 வயது இளைய மஹிகா சர்மா, இந்திய பேஷன் உலகின் நன்கு அறியப்பட்ட முகம். இவர் ELLE மற்றும் கிராசியா போன்ற சிறந்த பத்திரிகைகளின் முதல் அட்டைப்படங்களில் இடம் பெற்றிருந்தார். மேலும், இந்திய ஃபேஷன் விருதுகளில் ஆண்டின் சிறந்த மாடல் விருதை வென்றுள்ளார். ஹர்திக் பாண்ட்யா மற்றும் மஹிகா காதல் விவகாரம் குறித்து ரசிகர்கள் பல மாதங்களாக ஊகித்து வந்தனர். மஹிகா தனது சமூக ஊடக பதிவுகளில் ஒன்றில், ஹர்திக் பாண்ட்யா உடையை அணிந்திருந்தார். மேலும், அவரது ஜெர்சி எண் 33 ஐ விரலில் எழுதிருந்தார்.