இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கான அடையாள அட்டையாக ரேஷன் அட்டைகள் (Ration Card) உள்ளன. அடையாள அட்டையாக மட்டுமன்றி, பொதுமக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் கருவியாகவும் இது உள்ளது. இவ்வாறு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கும் நிலையில், பொதுமக்கள் செய்யும் இந்த சிறிய தவறு மூலம் அவர்களின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படுவதற்கும், அவர்களது ரேஷன் அட்டை ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரேஷன் அட்டையை முறையாக பராமரிக்க தவறும் பொதுமக்கள்அரசின் நலத்திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றால் ரேஷன் கார்டு மட்டும் வைத்திருந்தால் போதாது. அந்த ரேஷன் கார்டை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். அரசின் அறிவுரைப்படி ரேஷன் கார்டுகளை தொடர்ந்து அப்டேட் செய்வது, மாதம் மாதம் தவறாமல் பொருட்களை வாங்குவது ஆகியவை ரேஷன் கார்டுகளை முறையாக பராமரிக்கும் நடைமுறைகளாகும். இவற்றை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அது அரசின் கவனத்திற்கு சென்று ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடும்.
இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு.. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!
ரேஷன் கார்டை முறையாக பராமரிப்பது எப்படி?தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு தகுதியற்ற ரேஷன் கார்டுகளை நீக்கம் செய்யும் தீவிர பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க : வீட்டில் இருந்தே சேவைகளை பெற வந்தாச்சு mAadhaar செயலி.. பதிவிறக்கம் செய்வது எப்படி?
மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்களை செய்து முடிக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.