Chennai Super Kings: 5 வீரர்களை விடுவிக்க திட்டமிடும் சிஎஸ்கே… இந்த வெளிநாட்டு வீரரும் வெளியேறுகிறாரா..?
TV9 Tamil News October 12, 2025 12:48 AM

2026ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2025 ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இந்தநிலையில், ஐபிஎல் 2026க்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இப்போது பெரிய மாற்றங்களை செய்ய தயாராகி வருகிறது. வெளியான தகவலின்படி, ஐபிஎல் 2026க்கான மினி ஏலத்திற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வீரர்களை விடுவிக்கக்கூடும் என்று தெரிகிறது.

எந்தெந்த வீரர்கள் விடுவிக்க வாய்ப்பு..?

2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன், நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே, தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் விடுவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, அணியின் மோசமான செயல்திறன் இந்த வீரர்களை விடுவிக்க வழிவகுத்தது.

ALSO READ: டாப் 4க்குள் இடம்பிடித்த தென்னாப்பிரிக்கா.. இந்திய அணிக்கு எந்த இடம்.. புள்ளிகள் பட்டியல் நிலவரம் இதோ!

கடந்த 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் செயல்திறன் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மோசமாக அமைந்தது. இதில் களமிறங்கிய டெவன் கான்வே, தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திரிபாதி தொடர்ந்து சொதப்பினர். அதாவது, ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் 138.29 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,315 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மேலும், பவர்பிளேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக குறைந்த ரன்களை (693) எடுத்து 29 விக்கெட்டுகளை இழந்தது.

கிடைத்த தகவலின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வருகின்ற ஐபிஎல் 2026 சீசனில் இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறது. அதன்படி, அணியை மீண்டும் கட்டியெழுப்ப அந்த அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுவிக்கும் முன்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றதால் மாற்று வீரரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் தேடும்.

ALSO READ: என் அனுமதி இல்லாமல்.. நக்வி பிடிவாதம்! இந்திய அணிக்கு கோப்பை தர மறுப்பு!

சிஎஸ்கே அணியிடம் எவ்வளவு பணம் உள்ளது..?

ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பர்ஸில் ரூ.9.75 கோடிஅயை சேர்த்துள்ளது. அதேபோல், மேலே குறிப்பிட்ட 5 வீரர்களை சிஎஸ்கே விடுவித்தால், அந்த பர்ஸில் ரூ.25 கோடிக்கு மேல் இருக்கும். ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்காக 10 அணிகளும் வருகின்ற 2025 நவம்பர் 15ம் தேதிக்குள் தங்கள் தக்கவைப்பு பட்டியலை இறுதி செய்ய வேண்டும். அதன்படி, 2026 ஐபிஎல் மினி ஏலம் வருகின்ற 2025 டிசம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.