மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் விசாகப்பட்டினத்தில் மோதியன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்காக தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ரவல் பீல்டை கலக்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்து ஆக்கிரமிப்பு ஆட்டம் ஆடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர்.
இருவரும் சேர்ந்து 155 ரன்கள் சேர்த்தனர். மந்தனா 80 ரன்களுக்கு, பிரதிகா 75 ரன்களுக்கு விக்கெட் இழந்தனர். பின்னர் ஜெமினா ரோட்ரிக்ஸ் 33 ரன்களும், ரிச்சா ஹோஸ் 32 ரன்களும் பங்களித்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 48.5 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அனபெல் சுதர்லாந்து சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
331 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி தற்போது பதிலடி ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். ஒரே வருடத்தில் 1000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா உலக சாதனைப் படைத்தார். இதன் மூலம் 28 வருட சாதனையை முறியடித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?