திடீரென பிக் பாஸில் இருந்து வெளியேறிய நந்தினி.. எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?
Top Tamil News October 13, 2025 12:48 PM

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன், கடந்த அக்டோபர் 5 மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. கடந்த சீசனில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தனது இயல்பான பாணியால் ரசிகர்களை கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

 

இந்த சீசனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா சின்க்ளேர், எப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா CJ , நந்தினி, விக்ரம், கமருதீன், கலையரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க் கொண்டுதான் இருக்கிறது. அதன்படி 
இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் நந்தினி. அவர் வீட்டின் மற்றவர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் மன அழுத்தத்தால் தாமாக முன்வந்து வெளியேறினார்.

நந்தினி எப்போதும் சிரித்தபடியே இருப்பதாகக் கூறி சக போட்டியாளர்கள் அவரை கேலி செய்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனிமையில் அழுதுள்ளார். அப்போது தன்னை சமாதானப்படுத்த வந்தவர்களைக் கூட, "யாரும் கிட்ட வராதீங்க" என்று ஆக்ரோஷமாகக் கத்தி, தனிப்பட்ட அழுத்தத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு, சக போட்டியாளரான கனி தலையிட்டு நந்தினியை சமாதானப்படுத்தியுள்ளார், அதைத் தொடர்ந்து அவர் சற்று அமைதியானார். எனினும், போட்டியாளர்கள் அனைவரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஆவேசமடைந்த நந்தினி, "இங்கு யாருமே உண்மையாக இல்லை. என்னால் உங்களைப் போல நடிக்க முடியாது" என்று கோபத்துடன் கத்தினார்.

இந்த தொடர்ச்சியான மன உளைச்சல் காரணமாக, நந்தினி 'பதட்டத் தாக்குதலுக்கு' உள்ளானார். மருத்துவ சிகிச்சை மற்றும் பிக்பாஸுடனான உரையாடலுக்குப் பிறகு, அவரால் போட்டியில் தொடர முடியவில்லை. இதன் விளைவாக, அவர் முதல் வார எலிமினேஷனுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். 

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர். ஜே. நந்தினி, வீட்டிற்குள் ஐந்து நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர் பெற்ற சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நந்தினிக்கு ஒரு நாளுக்கான சம்பளமாக ரூபாய் 1,000 பேசப்பட்டிருந்தது. இந்தக் கணக்கீட்டின்படி, நந்தினிக்கு வழங்கப்பட்ட மொத்த சம்பளத் தொகை ரூபாய் 5,000 மட்டுமே என செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது ஐந்து நாள் பங்களிப்புக்கு இந்தத் தொகையே கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.