நேற்று நடைபெற்ற பிரபல ரவுடி நாகேந்திரன் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் ரவுடிகள் குறித்து உளவுத்துறை முன்னரே எச்சரித்திருந்த நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாகேந்திரனின் வலதுகரமாக இருந்தவரும், பல கொலை வழக்குகளில் குற்றவாளியான பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (44) விழுப்புரம் பகுதியில் தங்கி பல திரைமறைவு வேலைகளை செய்து வந்தார்.
போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், வெள்ளை பிரகாஷ் நாகேந்திரனின் இறுதி சடங்கிற்கு அஞ்சலி செலுத்த வருவதாக எதிர்பார்க்கப்பட்டார். இதையடுத்து கொடுங்கையூர் பார்வதி நகர் பகுதியில் போலீசார் வெள்ளை பிரகாஷை சுற்றிவளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் வெள்ளை பிரகாஷ், “நாகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்த வந்தேன், ரவுடிகளுக்கு கொடுப்பதற்காக கஞ்சாவும் கொண்டு வந்திருந்தேன். குருவுக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்துக் கொண்டிருந்தேன்” என்று ஒப்புக் கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; அப்போது போலீசார் 40 வெடிகுண்டுகள், 40 அரிவாள்கள், 4 கத்திகள் மற்றும் ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கால் உடைந்து, பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் வெள்ளை பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?