Biggboss Tamil Season 9, Day 7: திவாகரையும், பிரவீண் காந்தியையும் முடிச்சிவிட்ட விஜய்சேதுபதி.. அதிகாரத்தை பயன்படுத்த தெரியாத சூப்பர் டீலக்ஸ் போட்டியாளர்.. இன்னும் குறையாத பார்வதியின் ஆட்டிடியூட்.. தற்பெருமை பேசி திருந்தாத திவாகர்..
Tamil Minutes October 13, 2025 04:48 PM

பிக் பாஸ் தமிழ் சீசன் 9-இன் முதல் எவிக்ஷன் எபிசோட், வழக்கமான வார இறுதி எபிசோட்களில் இருந்து சற்றே வேறுபட்டு, விஜய் சேதுபதியின் நேரடியான விமர்சனங்களால் அனல் பறந்தது. நேற்று ஒளிபரப்பான இந்த எபிசோடில், பிரவீண் காந்தி வெளியேற்றப்பட்டார். ஆனால், அந்த எவிக்ஷனை விட, ‘தல’ என அழைக்கப்படும் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸ்களின் பொறுப்பற்ற தன்மையே, விஜய் சேதுபதியின் பிரதான கேள்விகளாகவும், விமர்சனங்களாகவும் இருந்தன.

விஜய் சேதுபதியின் தோற்றம் எப்போதும் போல மிக சிறப்பாகவும், யூத்ஃபுல்லாகவும் இருந்தது. அவரது பாடி லாங்குவேஜ், முந்தைய வாரங்களை விட சற்று மேம்பட்டிருந்ததாகவே தெரிகிறது.

இந்த வாரத்தின் மிகப்பெரிய ஹைலைட் என்னவென்றால், அவர் மிகவும் சாதாரணமாக ஒரு படிக்கட்டில் அமர்ந்து திவாகர் மற்றும் பிரவீண் காந்தியுடன் உரையாடியதுதான். பிக் பாஸ் வரலாற்றிலேயே இது முதல் முறை. இதன் மூலம், போட்டியாளர்களை அவர் நெருங்கி சென்று, அவர்களின் செயல்பாடுகளை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க முடிந்தது.

திவாகரையும், பிரவீண் காந்தியையும் அவர் “முடிச்சுவிட்ட விதம்” நிகழ்ச்சிக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்தது. குறிப்பாக, பார்வையாளர் பகுதியிலிருந்து எழுந்த ஒரு கேள்வியால் விஜய் சேதுபதி தர்மசங்கடத்துக்கு உள்ளானது, சற்றே நம்பகத்தன்மை குறைந்த காட்சியாக இருந்தது.

வீட்டின் பிரதான பொறுப்பை வகித்த சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸ்களின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளித்தது. அவர்களிடம் “உங்களுக்குப் பொறுப்புகள் புரிந்ததா?” என்று விஜய் சேதுபதி கேட்டபோது, பலரின் பதில்கள் கேலிக்குரியதாக இருந்தன.

சுபிக்ஷா: “அதிகாரம் எங்களிடம் உள்ளது, அதை பயன்படுத்தினோம். ஆனால், அவர்கள் வேலை செய்யாத ஒரு நாள் அதிகாரத்தை பயன்படுத்திய பிறகு, மீண்டும் பயன்படுத்தினோம். அதிகாரத்தை எப்படி பயன்படுத்துவது என புரியவில்லை என்று கூறினார்.

வியன்னா: “நான் என் வீட்டில் செல்ல பிள்ளையாக இருக்கிறேன். இங்கு எப்படி வேலை வாங்குவது என்று தெரியவில்லை. பிக் பாஸ் வீடு என்பது ஒரு சமுதாயப் பரீட்சை. தனிப்பட்ட செல்ல பிள்ளை தனத்தை பேச வேண்டிய அவசியமில்லை.

வினோத்: “நாங்கள் சீக்கிரம் எழுந்து, அவர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்தோம். பவர் கையில் இருந்தும், மற்றவர்களை எழுப்ப பயன்படுத்துவதை, ‘பனிஷ்மென்ட்’ ஆக பார்க்கிறார்.

அரோரா: “வேலை செய்யவில்லை என்றால் பனிஷ்மென்ட் கொடுக்கலாம். பனிஷ்மென்ட் அளிப்பதை விட, பேசி புரிய வைப்பது, ‘புஷ்’ செய்து வேலை வாங்குவது பற்றி அவருக்கு புரியவில்லை.

கமருதீன்: வேக் அப் சாங் போட்டு எழுப்பினாலும், எல்லாரையும் தண்டிக்க மனசு வரவில்லை. ‘நல்லவர்’ இமேஜ் காட்ட முயல்வது, பொறுப்பை தட்டிக் கழிப்பது.

பிரவீண் காந்தி: “நாங்கள் ரோல் மாடலாக இருக்கிறோம். ஆடியன்ஸை என்டர்டெயின் செய்கிறோம். சூப்பர் டீலக்ஸ் பவர் என்றால் என்னவென்று புரியாமல், சம்பந்தமே இல்லாமல் “என்டர்டெயின்மென்ட்” பற்றிப் பேசினார்.

இதையெல்லாம் பொறுமையாக கேட்ட விஜய் சேதுபதி நேரடியாகவே, “உங்களுக்கு பவர் கொடுத்திருந்தும், அவர்கள்தான் உங்களை டாமினேட் செய்கிறார்கள். கம்ப்ளெய்ன்ட் பண்ணாதீர்கள், என்ன பண்ணலாம்னு யோசியுங்கள்” என்று கோபப்பட்டார். ஆனாலும், பிரவீண் காந்தியின் பதில் “நாங்கள் ஆடியன்ஸை என்டர்டெயின் செய்கிறோம்” என்றிருந்தது, அவர் எவிக்ஷனுக்கு இதுவே ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஒரு டாஸ்க்கின் நோக்கத்தை கூட புரிந்துகொள்ளாத ஒருவராகவே அவர் தெரிந்தார்.

இந்த எபிசோடின் மிக முக்கிய பேசுபொருளாக இருந்தது திவாகர் மற்றும் பார்வதியின் விசித்திரமான பிணைப்பு. விஜய் சேதுபதியின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ‘சிறுபிள்ளைத்தனமாகவும்’ ‘முட்டாள்தனமாகவும்’ இருந்தன. அவர் “ஆல் ஓவர் இந்தியாவில் தனக்குப் ஃபேன்ஸ் இருக்கிறார்கள்” என்று பேசுவதும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாமல் சிரித்து மழுப்பவதும், அவரது முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

ஃபாலோவர்ஸ் – ஹேட்டர்ஸ் என்ற டிஸ்கஷனில், ஒருவர் குறைகளை கூறும்போது திவாகர் அதை ஏற்கவே மறுக்கிறார். “இந்தியா முழுக்க எனக்கு ஃபேன்ஸ் இருக்கிறார்கள்” என்று திரும்ப திரும்ப சொல்வது, தான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று காட்ட முயல்கிறது.

அவர் தொடர்ந்து பார்வதியையே ஃபாலோ செய்கிறார், (F. J.யின் குற்றச்சாட்டு). ஒரு கைப்பாவை போல, பார்வதியின் கவசமாகவே அவர் செயல்படுகிறார்.

பார்வதி, தனது அசாதாரணமான பாடி லாங்குவேஜ் மற்றும் முகபாவனைகள் மூலம் அதிக ஹேட்டர்ஸை சம்பாதித்து வருவதாகச் சுபிக்ஷா உள்ளிட்டோர் சுட்டி காட்டினர்.

பார்வதி, திவாகரின் சிறுபிள்ளைத்தனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அவரை பிக் பாஸ் வீட்டினுள் ஒரு அடிமை போல பயன்படுத்த முயற்சிக்கிறார். திவாகரின் அந்த “லூசுதனத்தையும், பைத்தியக்காரத்தனத்தையும் முன்னணியாக வைத்து” அவர் மிகவும் தெளிவாக ஆடுகிறார்.

சபரி மரியாதையுடன் பேசும்போது, அதைத் திவாகர் டிமாலிஷ் செய்வது, பார்வதியின் பிளானுக்கு அவர் எவ்வளவு தூரம் இரையாகியுள்ளார் என்பதைக் காட்டுகிறது.

விஜய் சேதுபதி, “உங்களை மாற்றி மாற்றி உட்கார வைக்க வேண்டும்” என்று கிண்டல் செய்தது, அவர்கள் ஒரு பள்ளி மாணவர்களை போலவே ட்ரீட் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதைக் குறிக்கிறது.

வினோத்: இவர் ஒரு கட்டத்தில், “இவர்கள் எப்பொழுதும் ரீல்ஸ் போடுவது போல கேமராவை நோக்கி பேசுகிறார்கள்” என்று மற்றவர்களின் ‘போலித்தனத்தை’ அம்பலப்படுத்தியது சரியான கணித்ததாக இருந்தது.

கமருதீனின் விமர்சனம்: சுபிக்ஷாவின் ஃபாலோவர்ஸ் பற்றி பேசும்போது, “மீனவ பெண் என்பதை முன்னிறுத்துவதால் சமுதாயமே அவருக்கு ஓட்டு போடும்” என்று அவர் விமர்சித்தது, ஒருசிலரின் குறுகிய மனப்பான்மையையும், மக்களின் உணர்வுகளை வாக்குகளுக்காக பயன்படுத்துவார்கள் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது. இதற்கு விஜய் சேதுபதியின் பதில், “யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படிக்கலாம்” என்றிருந்தது மிகவும் அவசியம்.

FJ: அவர் திவாகரை பற்றி அளித்த விமர்சனம் “வாட்டர் மெலன் ஸ்டாராக” திவாகர் இருப்பதை பிடிக்கவில்லை, ஆனால் ஒரு நல்ல மனிதராக பிடிக்கும் என்று குறிப்பிட்டது, அவர் வெளிப்படுத்தும் போலியான கேரக்டரை தெளிவாக பிரித்துக் காட்டியது.

சூப்பர் டீலக்ஸ் டாஸ்க்கின் நோக்கத்தை புரிந்துகொள்ளாத பிரவீண் காந்தி, தனது ‘என்டர்டெயின்மென்ட்’ பாணியை பற்றி மட்டுமே பேசினார். அவரது ஆட்டமும், பொறுப்பற்ற பதில்களும் முதல் ஆளாக வெளியேற அவரைத் தள்ளியது.

பிக் பாஸ் வீட்டில், நேர்மையும் புத்திசாலித்தனமான ஆட்டமுமே வெல்லும் என்பதை உணராமல், வெறுமனே நடிப்பதும், புரியாமல் பேசுவதும் பிரயோஜனமில்லை. பொறுப்புணர்வில் ‘ஜீரோ’ மார்க் வாங்கிய சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸுக்கே இந்த எவிக்ஷன் ஒரு பெரிய பாடம்.

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

Author: Bala Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.