வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தங்கள் கட்சி பலத்தை அதிகரிக்க தமிழக அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் திமுக மா.செ.மதியழகன் MLA முன்னிலையில் பிற கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்தப் புதிய சேர்க்கையில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் தமிழக வெற்றி கழக (தவெக) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் ஆதரவை திமுகவுக்கு மாற்றியுள்ளனர். இந்நிகழ்வில், புதிதாக இணைந்தவர்களுக்கு திமுகக் கட்சித் துண்டைப் போர்த்தி, மதியழகன் MLA வரவேற்பளித்தார்.
திமுக வளர்ச்சிப் பாதையை நம்பிக்கை கொண்டு தேர்ந்தெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்ததுடன், இது கிருஷ்ணகிரியில் திமுகவின் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.