கரூர் மாவட்டத்தில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதில், “சம்பவம் நடைபெற்ற உடனே, சம்பவ இடத்திற்கு செல்ல காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால், நீங்கள் வந்தால் கலவரம் ஏற்படலாம் என்று தெரிவித்ததால் நாங்கள் செல்ல முடியவில்லை” என்றார்.
மேலும், “நாங்கள் அன்றைய இரவு முழுவதும் தயங்கிக்கொண்டே காத்திருந்தோம். என்ன சொல்கிறேனோ அது பொய்யா இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள, அந்த நாள் இரவில் எங்கள் செல்போன் GPS பதிவுகளை ஆய்வு செய்தாலே போதுமானது” என அவர் வலியுறுத்தினார்.
இந்த தகவல்கள், தவெக தலைவர்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும், சம்பவத்துக்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கும் வகையிலும் பேசப்படுகிறது