நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டம், எதிர்பாராத அரசியல் சூழ்நிலைக்கு வலை விழுந்தது. கூட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தொண்டர்களும் தங்களது கட்சி கொடிகளை ஏந்தியவாறு வரவேற்பளித்தனர். அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் தங்களது கொடியுடன் கூட்டத்தில் தோன்றியதால் அங்கு சிறிது பரபரப்பான நிலை ஏற்பட்டது.
இதைக் கவனித்த எடப்பாடி பழனிசாமி தனது உரையின் போது, “நம்ம கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி… பாருங்க தவெக கொடியும் பறக்குது… பிள்ளையார் சுழி போட்டாங்க…” என்று சிரித்தபடி தெரிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் எழுச்சியும் ஆரவாரமும் சூழ்ந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் விருப்பப்பட்டு வந்து ஆதரவு தருகிறார்கள். இது திமுக கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் திட்டமிட்டு விமர்சனம் செய்கிறார்கள். எங்கள் கூட்டணி சுதந்திரமானது. எங்கள் கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக பரிதவிக்கிறது” என குற்றம்சாட்டினார். தவெகவினர் கட்சித் தலைமையின் அனுமதியுடன் வருவதை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.