Rajinikanth: 3வது முறையாக இணையும் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி!
TV9 Tamil News October 13, 2025 08:48 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் சினிமாவில் இதுவரை சுமார் 171வது திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கூலி (Coolie). இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்க, ரஜினிகாந்த் அசத்தல் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன், நாகார்ஜுனா உபேந்திரவாவ், ஸ்ருதிஹாசன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக தற்போது நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்து வருகிறார்.

இந்த ஜெயிலர் 2 படமானது கேரளாவை மையமாக கொண்டு நடைபெறும் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாவதாக கூறப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியாக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து, 3வது முறையாக நெல்சன் திலீப்குமார் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் புதிய படம் உருவாக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் இன்னும் உச்சத்தில் இருக்க காரணம் அதுதான்- ரஜினிகாந்த் குறித்துப் பேசிய துருவ் விக்ரம்!

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணி :

ஜெயிலர் 2 படத்தின் மூலம் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் 2வது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, நெல்சன் திலீப்குமார் புதிய படத்திற்கான கதையை ரஜினிகாந்திடம் கூறியதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்திருந்த நிலையில் மீண்டும் நெல்சன் திலீப்குமார் ரஜினியுடன் படத்தை இயக்குவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் நெல்சன் திலீப்குமார் தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-யை வைத்தும் புதிய படம் ஒன்றை இயக்குவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இதையும் படிங்க: சூர்யாவின் ‘கருப்பு’ ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு உறுதி… அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!

ஒருவேளை ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணி 3வது முறை இணைந்தால் அந்த படமானது, கமல்ஹாசன் மற்றும் ரஜினியின் கூட்டணி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

Muthuvel Pandian’s hunt begins!💥 #Jailer2 shoot starts today🌟@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/v72a7wXpDH

— Sun Pictures (@sunpictures)

இந்த ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு, சுராஜ் வெஞ்சராமூடு, சிவராஜ்குமார் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.