பிரபல சின்னத்திரை நடிகை ஆயிஷா, தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9-ல் வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் 9வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய தெலுங்கு பிக் பாஸ் 9-ஐ நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், நிகழ்ச்சியின் 35வது நாளில், ஆயிஷா உள்பட ஆறு புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.தமிழ் பிக் பாஸ் சீசன் 6-ல் பங்கேற்று 63 நாட்கள் விளையாடிய ஆயிஷா, அப்போது தன்னுடைய வலுவான கருத்துகள் மற்றும் நேர்மையான பேச்சால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
தற்போது அவர் தெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதால், நிகழ்ச்சியில் மேலும் சுவாரஸ்யம் மற்றும் போட்டித் தன்மை உயரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.சுவாரஸ்யமாக, வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த ஆறு பேரும் முதல் நாளிலேயே தங்களுக்குக் கிடைத்த சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, போட்டியாளர் சிரிஜாவை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?