கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், இது அரசியல் சூழலை வித்தியாசமாக மாற்றியுள்ளது.
இந்த விசாரணையை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்புடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது நீதியை உறுதி செய்யும் வழி எனவும், உண்மை வெளிப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், இது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் பதிவு செய்து வருகின்றனர்.
அவர்கள் கூறுவது என்னவெனில், “விஜய் எலியிடமிருந்து தப்பிக்க நினைத்தபோது, புலியிடம் சிக்கி விட்டார்” என்பதே. அதாவது, மாநில அரசின் ஒட்டுமொத்த அமைப்புகளையும் குறிவைத்து விமர்சித்த விஜய், தற்போது மத்திய அரசின் சிபிஐ விசாரணையின் பிடியில்தான் சிக்கி இருக்கிறார் எனக் குறிப்பிட்டு, இது பாஜகவின் கையில் போகும் அபாயகரமான முடிவாகும் என்றும் திமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கு பதிலாக, தவெகவினர், “உண்மையை வெளிக்கொணர சிபிஐ விசாரணையை நாங்களே கோரியுள்ளோம் . எதையும் துணிந்து எதிர்கொள்வோம். பயமில்லை, பதில் இருக்கிறது” என தெளிவான பதிலடியாக தெரிவித்து வருகின்றனர்