தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் நான்கு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.இன்றைய தினம், சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கால அளவையும், நிகழ்ச்சி நிரலையும் தீர்மானிக்கும் விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: “நாளை சட்டப்பேரவை கூடும். அப்போது மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். மேலும், மறைந்த எம்எல்ஏ அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்படும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “அக்டோபர் 15ஆம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அக்டோபர் 17ஆம் தேதி விவாதத்திற்கான பதிலுரை வழங்கப்படும்,” என்றும் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?