கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரம்ப விசாரணையை கரூர் போலீசார் மேற்கொண்டிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. தவெக, உச்சநீதிமன்றத்தில், தமிழக போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா தலைமையிலான அமர்வு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடினார். மேலும், இந்த விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைக்கப்படும் அறிவிப்பு வெளியாகியது. SIT குழுவில், தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேரை ரஸ்தோகி தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜய் ரஸ்தோகி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 2018 முதல் 2023 வரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாகப் பணியாற்றிய இவர், 2004 முதல் 2018 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். தனது பதவிக் காலத்தில் 506 அமர்வுகளில் பங்கேற்று விசாரித்த ரஸ்தோகி, ஜல்லிக்கட்டு விளையாட்டு, திருமண மீறிய உறவுகள், கருணைக் கொலை உரிமை போன்ற விவகாரங்களில் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?