கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி நடிகர் விஜய் தலைமையிலான தவெக சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கான 16-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள tvk தலைமையக நுழைவு வாயிலில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களுடன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. புகைப்படங்களின் கீழ் “உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் எண்ணங்கள் ஈடேற சபதம் ஏற்போம்” என உருக்கமான வாசகம் இடம் பெற்றிருந்தது.
புகைப்படம் இல்லாத உறுப்பினர்களுக்காக பூக்குடைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நிகழ்வை முன்னிட்டு தலைமையக வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். நினைவுநாளைய முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.