கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பொன்குன்னம் பகுதியில் வசிக்கும் 24 வயது அனந்து அஜி, சமீபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து விலகியவர். தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்ததால், அனந்து தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவர் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் திரும்பவில்லை. இதுகுறித்து குடும்பத்தினர் கோட்டயம் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடந்து வரும் நிலையில், அனந்து அஜி திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு லாஜ்ஜில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அனந்து அஜியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய மரணத்திற்கு பின் வெளியாகும் வகையில் பதிவு வெளியிடப்பட்டிருந்தது. பதிவில், குழந்தைநிலையில் ஆர்எஸ்எஸ் முகாமில் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதையும், அதன் விளைவாக மனநலக் குறைபாடுகள் ஏற்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தன் தந்தை அவரை முகாமில் சேர்த்ததாகவும், அதன்போது சந்தித்த கொடுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது. போலீசார் அனந்து அஜியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?