மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ரூ.2 லட்சத்தை நெருங்கும் வெள்ளி..!
Webdunia Tamil October 14, 2025 12:48 AM

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில் இன்று மாலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 440 உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விற்பனை விலை ரூ. 92,640 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 11,580க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு தினசரி உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதியே ஒரு சவரன் விலை ரூ. 90,000ஐ கடந்தது. அதை தொடர்ந்து, வெறும் மூன்று நாட்களுக்குள் ரூ. 92,000ஐ எட்டியது. இன்று காலை ரூ. 200 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 440 அதிகரித்து, புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தங்கத்தைப்போலவே, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று காலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 2 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ. 197க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,97,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் இந்த அதீத உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.