பொதுவாக நம் உடலில் ஒவ்வொரு உறுப்பும் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு உணவுகள் முக்கியம் .அந்தவகையில் கிட்னிக்கென்றும் ,நுரையீரலுக்கென்றும் சில வகை உணவுகள் உண்டு .அதே போல இதயம் சிறப்பாக இயங்க சிலவகை உணவுகள் உண்டு .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.நம் இதயத்துக்கு இரும்பு சத்து முக்கியம் .இதய படபடப்பு, இரும்புச் சத்து குறைவின் அறிகுறியாகும்.
2.நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் உடலின் திசுக்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் செல்லாது.
3.அப்போது போதுமான ஆக்ஸிஜனை அளிப்பதற்காக இதயம் அதிகமாக வேலை செய்யும்.
4.அப்போது இதய துடிப்பு சீராக இல்லாமல் வேகமாக துடிக்கும் .
5.இதற்குச் சிகிச்சையளிக்காவிட்டால் இதயம் வீங்கும்; இதயம் செயலிழக்கும் வாய்ப்புள்ளது
6.சருமத்தில் வறட்சி, கூந்தல் பாதிப்படைதல், நகங்கள் உடைதல் ஆகியவை இரும்புச் சத்து குறைந்துள்ளதன் அறிகுறிகள் என்பதால் இதை கவனிக்க வேண்டும் .
7.நம் இதயத்திற்கு இரும்பு சத்துள்ள உணவுகள் கம்பம்புல், கேழ்வரகு, அவல் சேர்த்து கொள்ள வேண்டும்
8.நம் இதயத்திற்கு அயன் சத்துள்ள முளைகட்டிய கோதுமை, வறுத்த கடலை, வறுத்த பட்டாணி, கோயாபீன்ஸ், காராமணி,சேர்த்து கொள்ளலாம்
9.நம் இதயம் சிறப்பாக இயங்க பீன்ஸ், வெங்காயத்தாள், வாழைக்காய், சுண்டைக்காய், காலிஃபிளவர், மணத்தக்காளி, சேர்த்து கொள்ளலாம்
10.நம் இதயத்திற்கு முள்ளங்கிக் கீரை, பசலைக்கீரை, முட்டை, ஆட்டு ஈரல், சிறுமீன்கள், பாதாம், முந்திரி, கொப்பரைத் தேங்காய், தர்பூசணி விதை,ஆகிய அயன் பொருட்களை சேர்த்து கொள்ளலாம்
11. நம் இதயத்திற்கு நெல்லிக்காய், பேரீச்சை, கொய்யா, கொடுக்காப்புளி, அன்னாசி, மாதுளை, உலர்திராட்சை, சீத்தாப்பழம், காரட், கருணைக்கிழங்கு, சாப்பிட்டு பயனடையலாம்
.