உலகப் புகழ்பெற்ற ஈ-காமர்ஸ் நிறுவனம் அமேசான், தனது ஊழியர்களில் சுமார் 15 சதவீதரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் உலகளவில் சுமார் 10,000 ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சியாட்டிலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமேசான், ஆன்லைன் விற்பனை, கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் விளம்பரம், ஓ.டி.டி. சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் முன்னணியில் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக பல பிரிவுகளில் செயல்திறனை உயர்த்தும் நோக்கில் பணியாளர் சுருக்கத் திட்டம் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
முக்கியமாக மனிதவள மேம்பாட்டு பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மீது இந்த பணிநீக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக விரிவடைந்துவருவதாலும், செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்படுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமேசான் வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
அமேசான் கடந்த ஆண்டுகளிலும் பல முறை பணியாளர் சுருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், இம்முறை மேற்கொள்ளப்படும் 15 சதவீத பணிநீக்கம் அதன் வரலாற்றிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?