நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட மாதிரி கணக்கெடுப்பு நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, வீடுகளை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்கும்; மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி 2027 பிப்ரவரி 1 முதல் நடைபெறும். இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பும் இணைந்து மேற்கொள்ளப்படும்.
இந்த முழுமையான பணிக்கான தயாரிப்பாக, மாதிரி கணக்கெடுப்பு நவம்பர் 10 முதல் 30 வரை அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நடக்கிறது. இதில் உண்மையான கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சோதனை ரீதியில் கேட்கப்படும்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் மிருத்யுஞ்சய் குமார் நாராயணன் வெளியிட்ட அறிவிப்பில், முதன்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை தாங்களே சேர்த்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான சோதனை நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இந்த முயற்சி, டிஜிட்டல் முறையில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்கவும், கணக்கெடுப்பின் துல்லியத்தையும் மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?