இந்த வருடம் தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் தொடர்ந்து மூன்று தினங்கள் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளன. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் நோக்கி பயணிக்கும் மக்களின் பெரும் கூட்டம் காரணமாக, நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று பணி நாளாக இருந்தாலும் பலரும் இன்று விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊர் நோக்கி பயணப்படுகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால் பலர் தங்கள் சொந்த வாகனங்களில் புறப்பட்டனர். இதனால் கோயம்பேடு, மதுரவாயல், தாம்பரம் புறவழி சாலை, வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
சில பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்று போனதாகவும், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மாலையும் இதே போன்று மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகரம் இப்போதே வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?