திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வரும் அக்டோபர் 22ம் தேதி புனித கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.
அன்றைய தினம் உச்சிக்கால பூஜைக்குப் பின் சுவாமிக்கு காப்புக் கட்டுதல் நடைபெறும். அதன் பின்னர் சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதன் மூலம் ஆறு நாள் நீடிக்கும் ஆன்மிக கந்த சஷ்டி விழா ஆரம்பமாகிறது.
விழாவின் ஆறாம் நாளான அக்டோபர் 27ம் தேதி மாலை, பெருமாள் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி, வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகிய அரக்கர்களை சின்ன குமாரசுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 28ம் தேதி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் பெரும் திரளாக வருகை தரவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?