சர்வதேச சந்தை நிலவரத்தின் தாக்கத்தால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயரும் நிலையில், இன்று மேலும் பெரும் அளவில் உயர்வைக் கண்டுள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.40 மற்றும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்திருந்த தங்கம், இன்று (வெள்ளிக்கிழமை) ராக்கெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.12,200க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை ஏற்கனவே ரூ.95,000-ஐ கடந்த நிலையில், இன்றைய உயர்வு புதிய சாதனையாகும்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக உயர்வைக் கண்ட வெள்ளி விலை சிறிதளவு குறைந்துள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.206-ஆக இருந்த நிலையில், இன்று மேலும் ரூ.3 குறைந்து கிராமுக்கு ரூ.203-ஆகவும், கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?