தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
Dinamaalai October 17, 2025 06:48 PM

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை ஒரு நாளுக்கு முன்பாகவே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.