நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
Dinamaalai October 17, 2025 10:48 PM

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை அக்டோபர் 18ம் தேதி கேரள – கர்நாடக கடலோரங்களுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.கனமழை மற்றும் மிக கனமழை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம்

 மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால்

நாளை (18-10-2025) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்

நாளை மறுநாள் (19-10-2025) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, தென்காசிமழை அதிகரிக்கும் முன் பொதுமக்கள் எச்சரிக்கை மற்றும் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.