தீபாவளியின்போது (Diwali) இந்தியா முழுவதும் பல இடங்களில் இனிப்புகளில் கலப்படம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது ஸ்வீட்ஸ்களின் தேவை அதிகரிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் மலிமான மற்றும் ஆபத்தான இரசாயனங்களை பயன்படுத்தி லாபத்தை ஈட்டுகிறார்கள். கலப்பட ஸ்வீட்ஸ் (Adulterated Sweets) நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவை செரிமான பிரச்சனைகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் போன்ற உறுப்புகளையும் பாதிக்கின்றன. எனவே, கலப்பட இனிப்புகளை அடையாளம் காண்பது முக்கியம். அந்தவகையில் ஸ்வீட்ஸின் தரத்தை எப்படி கண்டறிவது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: என்ன ஆச்சு மக்களுக்கு? – குறையும் தீபாவளி மோகம்!
அதிக லாபத்திற்காக மேற்கொள்ளப்படும் சில விஷயங்கள்:தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் ஸ்வீட்ஸ்களில் தேவை அதிகமாக இருக்கும். அதன்படி, ஸ்வீட்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் பால், நெய், எண்ணெய் மற்றும் சர்க்கரையுடன் மலிவான மாற்றுகளை கலக்கிறார்கள். அதாவது பாலில் தண்ணீரையும், நெய்யில் பாமாயில் மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெயையும் பயன்படுத்துகிறார்கள். இனிப்புகளை பளபளப்பாக்க, அவர்கள் வெள்ளி படலத்திற்கு பதிலாக அலுமினிய படலத்தைப் பயன்படுத்துகிறார்கள், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இப்படி கலப்பட இனிப்புகளை சாப்பிடுவதால் 24 மணி நேரத்திற்குள் வயிற்று தொற்று, அஜீரணம் மற்றும் புட் பாய்சன் ஏற்படலாம். சில நேரங்களில் இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களையும் எதிர்மறையாக பாதிக்கிறது.
கலப்பட இனிப்புகளை கண்டறிவது எப்படி..?இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரச் சான்றிதழ் பெற்ற, எப்போதும் பேக் செய்யப்பட்ட இனிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
ALSO READ: தீபாவளி நாளில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. பெரும் விபத்தை தவிர்க்கலாம்..!
இனிப்புகளை நீண்ட காலம் பாதுகாப்பாக வைப்பது எப்படி..?இனிப்புகளை 4-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்க காற்று புகாத கொள்கலன்களில் போட்டு வைக்கவும். இனிப்புகளில் புளிப்பு, பூஞ்சை அல்லது விசித்திரமான வாசனை இருந்தால், உடனடியாக அவற்றை தூக்கி எறியுங்கள். கெட்டுப்போன இனிப்புகளை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்.