தீபாவளி முன்னிட்டு சென்னை முழுவதும் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில்!
Dinamaalai October 18, 2025 04:48 AM

அக்டோபர் 20ம் தேதி  திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள், பொருட்கள் வாங்கவும் வெளியூர் செல்லவும் முக்கிய இடங்களில் மக்கள் அதிகளவில் கூடும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 18,000 போலீசார் தீபாவளி கால பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் தியாகராயர் நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாண்டிபஜார், வண்ணாரப்பேட்டை, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அவசரநிலைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் முக்கிய இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.