தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் இன்று காலை பெரிய விபத்து ஏற்பட்டது. மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், எதிரே கும்பகோணம் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் தவித்தனர். அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே சமயம், இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநரை தீயணைப்பு துறையினர் ஜேசிபி உதவியுடன் பல மணி நேர முயற்சிக்குப் பிறகு மீட்டனர்.விபத்தால் கும்பகோணம்–மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. சம்பவத்துக்கான காரணம் குறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?