தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் பெரும் திரளைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரெயில்வே பெரும் வசதி ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் வரும் அக்டோபர் 22 வரை மொத்தம் 110 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரெயில் இயக்க விவரம்:
இன்று (அக்.18): 24 சிறப்பு ரெயில்கள்
நாளை (அக்.19): 19 சிறப்பு ரெயில்கள்
திங்கட்கிழமை (அக்.20): 23 சிறப்பு ரெயில்கள்
செவ்வாய்க்கிழமை (அக்.21): 25 சிறப்பு ரெயில்கள்
புதன்கிழமை (அக்.22): 19 சிறப்பு ரெயில்கள்
தாம்பரம்–திருச்சி, சென்ட்ரல்–போத்தனூர், நாகர்கோவில்–தாம்பரம், மதுரை–தாம்பரம், தூத்துக்குடி–எழும்பூர், நெல்லை–செங்கல்பட்டு, கோவை–திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை 13 ரெயில்களும், நேற்று 24 ரெயில்களும் இயக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, அக்டோபர் 16 முதல் 22 வரை 147 சிறப்பு ரெயில்கள் தீபாவளி பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.