வங்கதேசத்தின் தலைநகரம் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து டாக்கா விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு பகுதியில் திடீரென தீ பரவியது. சில நிமிடங்களுக்குள் தீயின் அளவு பெருகி, அடர்ந்த புகை முழு வளாகத்தையும் மூடியது. இதனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்டதும், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். ஆரம்பக் கணக்குப்படி உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், பல கோடி டக்கா மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்க வாய்ப்பு உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?