இன்று எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
Top Tamil News October 20, 2025 03:48 PM

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர் வந்தது. ஆனால் எல்லோராலும் கங்கைக்குப் போய் குளிக்க முடியாதே. அப்படி குளிக்க முடியாதவர்கள் வென்னீரில் நீராடலாம். வென்னீரில் குளிப்பது கங்கையில் குளிப்பதற்கு சமம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. குளிப்பதற்கு முதல் நாள் இரவே அந்த நீரில் ஆல், அரசு, அத்தி, புசு மற்றும் மாவிலைகளைப் போட்டு வைக்க வேண்டும். பின்னர் காலையில் எப்போது குளிக்க வேண்டுமோ அதற்கு முன்பாக சூடுபடுத்தி அந்த நீரில் குளித்தால் சிறப்பு என்பது கங்கா ஸ்நானத்தின் வரலாறு.

 

தீபாவளி குளியல் என்பது கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக கருதப்படுவதால் இது கங்காஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய எண்ணெய்க் குளியல் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் முழுமை பெறாது.

தீபாவளி நாளான திங்கள்கிழமை (அக்.20) அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் என்று ஜோதிடா் தெரிவித்துள்ளார்.

நிகழும் விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 3-ஆம் நாள் திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்கு மேல் இரவு 7 மணிக்குள் தீபாவளி பூஜையும், குபேர பூஜையும் செய்வது உத்தமம். மறுநாள் செவ்வாய்க்கிழமை (21.10.2025) அன்று கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கலாம். இந்தாண்டு தீபாவளி பண்டிகை தினமான 20.10.2025 அன்று மாலை 3.45-க்கு தொடங்கி மறுநாள் (21.10.2025) மாலை 5.48 வரை அமாவாசை திதி உள்ளது. கேதார கௌரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து வீட்டில் கலசம் வைத்தோ அல்லது கோயிலுக்கு சென்றோ பூஜைகளைச் செய்துகொள்ளலாம். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.