உத்தரப் பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சுமேர்பூர் முதன்மை சுகாதார மையத்திலிருந்து பிகாபூர் சமூக சுகாதார மையத்திற்குப் நோயாளியை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வாகனம் இயக்கிக் கொண்டிருந்தபோது தனது மொபைல் போனில் ரீல்ஸ் பார்ப்பதும், பேஸ்புக் ஸ்க்ரோல் செய்வதும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. நோயாளியுடன் இருந்த ஒருவரே இந்த காட்சியை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அந்த வீடியோ வேகமாக வைரலாகி மக்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
“>
சம்பவம் வெளிச்சத்துக்குவந்ததையடுத்து, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
நோயாளிகளின் உயிர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்களில் இத்தகைய அலட்சியம் நடைபெறுவது, அரசு மருத்துவ சேவைகளின் மேற்பார்வை மற்றும் ஊழியர்களின் பொறுப்புணர்வு குறித்த கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் மேலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியம் இந்தச் சம்பவம் மூலம் வலியுறுத்தப்படுகிறது