தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் திருவிழாவை முன்னிட்டு நாளை அக்டோபர் 27ம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கும் மறுமார்க்கமாகவும் 1170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

நாளை அக்டோபர் 27ம் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழகத்திலும், பெங்களூருவிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு செல்லவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்.26) சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கு, திங்கட்கிழமை (அக்.27) அன்று திருச்செந்தூரிலிருந்து மீண்டும் இந்த இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும் மாநிலம் முழுவதும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இதன் அடிப்படையில், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு மொத்தம் 810 பேருந்துகளும், கோயம்பேடு, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் மாதாவரம் ஆகிய இடங்களிலிருந்து மொத்தம் 360 பேருந்துகளும் சேர்த்து 1,170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!