வானிலை நிலவரம், அக்டோபர் 26, 2025: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது நேற்று, அதாவது 25 அக்டோபர் 2025 அன்று, மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மணி நேரத்துக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. அதாவது, போர்ட் பிளேயரில் இருந்து தென்மேற்கு திசையில் 510 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கில் 890 கிலோமீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினம் தென்கிழக்கில் 920 கிலோமீட்டர் தொலைவிலும், தென்கிழக்கு காக்கிநாடாவில் இருந்து 920 கிலோமீட்டர் தொலைவிலும் இது நிலைகொண்டுள்ளது.
தீவிர புயலாக கரையை கடக்கும்:இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று, அதாவது அக்டோபர் 26, 2025 அன்று வலுப்பெறக்கூடும் எனவும், தொடர்ந்து நாளை 27 அக்டோபர் 2025 அன்று புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 அக்டோபர் 2025 அன்று இது தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா கடலோர பகுதிகள் மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே அன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஒருவர் வேணாம்னு சொல்லிட்டார்… பாமகவின் புதிய செயல் தலைவர்… தன் மகள் ஸ்ரீகாந்தியை அறிவித்த ராமதாஸ்
மீனவர்களுக்கான எச்சரிக்கை:வங்கக்கடலில் உருவாகக்கூடிய புயலின் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் 29 அக்டோபர் 2025 வரை, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு & மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்:
26-10-2025 மாலை முதல் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 27-10-2025 மாலை முதல் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், 28-10-2025 காலை முதல் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் படிக்க: பைக் டாக்ஸி புக் செய்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் பகீர்!
ஆந்திர கடலோரப்பகுதிகள்: 27-10-2025 காலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், 28-10-2025 காலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், 28-10-2025 மாலை முதல் 29-10-2025 அதிகாலை வரை: காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஒரிசா கடலோரப்பகுதிகள்: 28-10-2025 மாலை முதல் 29-10-2025 காலை வரை: காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு படிப்படியாக குறையக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்: 27-10-2025 வரை: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கர்நாடக – கேரள கடலோரப்பகுதிகள் & லட்சத்தீவு பகுதிகள்: 25-10-2025 முதல் 29-10-2025 வரை: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடகிழக்கு அரபிக்கடல் & மஹாராஷ்ட்ரா – குஜராத் கடலோரப்பகுதிகள்: 29-10-2025 வரை: சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.