அக்டோபர் மாதம் 36% அதிக மழை.. இனி வறண்ட வானிலையே இருக்கும் – பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
TV9 Tamil News November 04, 2025 06:48 AM

சென்னை, நவம்பர் 2, 2025: நவம்பர் மாதம் முழுவதும் மழையின் அளவு எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், 2025 அக்டோபர் மாதத்தில் இயல்பை விட அதிகமான மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக குறைந்தது.

இது ஒரு பக்கம் இருக்க, வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான மௌன்டா புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. இருப்பினும், அந்த புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் மிதமான மழை பதிவாகியது. அதேபோல், கிழக்கிலிருந்து வீசும் காற்று திசை மாறி மேற்கிலிருந்து வீசுவதாலும் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியது. ஆனால் தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது.

மேலும் படிக்க:  தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை..

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரவிருக்கும் நவம்பர் 7, 2025 வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சேலம், கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில்.. முழு விவரம்..

தமிழகத்தின் சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை (சுமார் 37.7 டிகிரி செல்சியஸ்) கடந்த வெப்பநிலை பதிவாகத் தொடங்கியுள்ளது.

36% அதிக மழை – பிரதீப் ஜான்:

🌧️ October Wrap Up for Tamil Nadu 🌧️
====================
October comes to an end and what a month it has been! 😍
Almost all districts in Tamil Nadu enjoyed excellent rains this month. Particularly Vellore, Ranipet, Tiruvallur, Tirunelveli, and Villupuram saw massive excess… pic.twitter.com/raBMJKRri4

— Tamil Nadu Weatherman (@praddy06)


இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்ததாவது:
“2025 அக்டோபர் மாதத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 233.9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது; வழக்கமாக அக்டோபர் மாதத்தில் 171.9 மில்லிமீட்டர் வரை மட்டுமே பதிவாகும். இதனால் 36 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. நவம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், மழையின் அளவு எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும்,” என தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.