தி.நகரில் உள்ள மங்கல வில்லா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தியாகராயர் நகர் நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். மின் கசிவு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன், குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக வெளியேற்றம் செய்துள்ளனர்.