IPL 2026: கொல்கத்தா அணியிடம் கொட்டிகிடக்கும் பணம்.. மற்ற அணிகளின் பர்ஸ் பேலன்ஸ் என்ன..? முழு விவரம்!
TV9 Tamil News November 16, 2025 11:48 AM

வருகின்ற 2025 டிசம்பர் மாதம் நடைபெறும் ஐபிஎல் 2026 (IPL 2026) ஏலத்திற்கு முன்னதாக, அதிகாரப்பூர்வ விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைப்பு பட்டியல்களை 2025 நவம்பர் 15ம் தேதியான நேற்று வெளியிட்டது. இதில், ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் பல முக்கிய வீரர்களை விடுவித்தும், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை மாலை 5 மணிக்கு வெளியிட்டது. இதில், கடந்த ஐபிஎல் 2025 ஏலத்தின்போது அதிக தொகைக்கு ஏலம் எடுத்த சில வீரர்களும் விடுவிக்கப்பட்டன. இந்தநிலையில், ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை அணி உள்பட ஒவ்வொரு அணியும் தங்களது பர்ஸில் எவ்வளவு தொகையை வைத்துள்ளது என்ற விவரத்தை தெரிந்து கொள்வோம். இந்த பட்டியலில் ஐபிஎல் தக்கவைப்புகளுக்குப் பிறகு, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற அதிக விலை கொண்ட வீரர்களை ஏலத்திற்கு முன்பு விடுவித்ததால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிக பணம் மீதமுள்ளது. அதன்படி, கொல்கத்தா அணிக்கு தனது பர்ஸில் ரூ. 64.3 கோடியை மீதம் வைத்துள்ளது.

அதேநேரத்தில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மிகக் குறைந்த பணத்தை கையில் வைத்துள்ளது. மும்பை அணி 17 வீரர்களைத் தக்கவைத்தது மட்டுமின்றி,  ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட 3 பேரை வர்த்தகம் மூலம் வாங்கியது.

ALSO READ:சூடுபிடிக்கும் ஐபிஎல் 2026.. எந்தெந்த அணிகள் யாரை வெளியிட்டது? முழு பட்டியல் இதோ!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பர்ஸ் பேலன்ஸ்:

PURSE REMAINING FOR IPL 2026 AUCTION:

KKR – 64.3cr.
CSK – 43.4cr.
SRH – 25.5cr.
LSG – 22.95cr.
DC – 21.8cr.
RCB – 16.4cr.
RR – 16.05cr.
GT – 12.9cr.
PBKS – 11.5cr
MI – 2.75cr pic.twitter.com/KcNlzNpwvc

— Adarsh (@Adarshkumar_05)

  • மீதமுள்ள இடங்கள் – 13
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 64.3 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் பர்ஸ் பேலன்ஸ்:
  • மீதமுள்ள இடங்கள் – 9
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 43.4 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பர்ஸ் பேலன்ஸ்:
  • மீதமுள்ள இடங்கள் – 10
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 25.5 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பர்ஸ் பேலன்ஸ்:
  • மீதமுள்ள இடங்கள் – 6
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 22.95 கோடி
டெல்லி கேபிடல்ஸ் பர்ஸ் பேலன்ஸ்:
  • மீதமுள்ள இடங்கள் – 8
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 21.8 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பர்ஸ் பேலன்ஸ்:
  • மீதமுள்ள இடங்கள் – 8
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 16.4 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் பர்ஸ் பேலன்ஸ்:
  • மீதமுள்ள இடங்கள் – 9
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 16.05 கோடி
குஜராத் டைட்டன்ஸ் பர்ஸ் பேலன்ஸ்:
  • மீதமுள்ள இடங்கள் – 6
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 12.9 கோடி
பஞ்சாப் கிங்ஸ் பர்ஸ் பேலன்ஸ்:
  • மீதமுள்ள இடங்கள் – 4
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 11.5 கோடி
மும்பை இந்தியன்ஸ் பர்ஸ் பேலன்ஸ்:
  • மீதமுள்ள இடங்கள் – 5
  • பர்ஸ் பேலன்ஸ் – ரூ. 2.75 கோடி

ALSO READ: சிஎஸ்கே அணி யாரை தக்க வைத்தது..? மற்ற அணிகளின் நிலவரம் என்ன..? முழு பட்டியல் இதோ!

ஐபிஎல் 2026 மினி ஏலம் எந்த தேதியில் நடைபெறும்?

ஐபிஎல் 2026க்கான மினி ஏலம் வருகின்ற 2025 டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.