குடிநீர் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரவும், வீண் செலவினங்களைத் தடுக்கவும் சென்னை குடிநீர் வாரியம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. முதல்கட்டமாக இம்மீட்டர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தப்பட உள்ளன.
சென்னையில் தற்போது 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. ஏரிகளில் இருந்து நீரை சுத்திகரித்து வீடுகளுக்கு வழங்க 1,000 லிட்டருக்கு ரூ.8 செலவாகிறது. அதேவேளையில், கடல்நீரை குடிநீராக்க ரூ.47 செலவாகிறது. இத்தகைய அதிக செலவினத்திற்குப் பிறகும், பொதுவீடுகளுக்கு மாதம் ரூ.105, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.200 என்ற குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பலர் தங்களின் குடிநீரை கார்களை கழுவவும், வீட்டுத் தோட்டங்களில் பாய்ச்சவும், நீச்சல் குளங்களை நிரப்பவும் பயன்படுத்தி வருவது வாரியத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. ஏழை மக்களும், அதிக வசதியுள்ளவர்களும் ஒரே கட்டணத்தைச் செலுத்தும் நிலை மாற்றப்பட வேண்டும் என்பதில் குடிநீர் வாரியம் உறுதியாக உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு மின் கட்டண முறையைப் போல பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ முறையை வாரியம் அறிமுகப்படுத்துகிறது. இதற்காக 1 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. முதலில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. பின்னர் 2,400 சதுர அடிக்கு மேற்பட்ட வீடுகளிலும் இம்மீட்டர்கள் நிறுவப்பட உள்ளன.

மேலும், இந்தத் திட்டத்தின் செயலாக்கம் மற்றும் கண்காணிப்புக்காக தனி கலந்தாலோசகரை நியமிப்பதற்கான நடவடிக்கையும் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. மழைக்காலத்திற்குப் பிறகு இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?