இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்!
Dinamaalai November 16, 2025 11:48 AM

மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருங்க மக்களே. இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 21ம் தேதி  தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து முக்கிய வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வானிலை நிபுணர்கள் கூறுகையில், “தற்போதைய வளிமண்டல நிலைமைகளின் அடிப்படையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம் படிப்படியாக வலு சேர்ந்து, நவம்பர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் அடைய வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வலுப்பெறும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை அளவு குறிப்பிடத்தக்க முறையில் அதிகரிக்கக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கடல் பரப்பில் காற்றின் வேகம் உயரக்கூடியதால், நவம்பர் 21ம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கடுமையாக எச்சரித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு உருவாகும் போது கரையோர பகுதிகளில் அலை உயரம், காற்றின் வேகம், மழை தீவிரம் ஆகியவை மாற்றம் அடையக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் வானிலை தகவல்களை தொடர்ந்து கவனமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.