தந்தைகள் உணர்வுகளைச் சொல்வது அரிது, ஆனால் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கை கொடுக்க வேண்டிய பொறுப்பை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடமாட்டார்கள். இதற்கு உயிரோட்டமுள்ள எடுத்துக்காட்டாக தற்போது வைரலாகும் ஒரு வீடியோ திகழ்கிறது. ஸ்விக்கி டி-ஷர்ட் அணிந்த டெலிவரி ஊழியர் ஒருவர், தனது ஆர்டருக்காக காத்திருக்கும் நேரத்திலும் மகளை லிஃப்ட் முன்பே அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.
View this post on InstagramA post shared by Abi | India (@abhigya_s)
“ஒவ்வொரு ஓய்வு நேரமும் ஒரு பள்ளியே” என்றபடி, அவர் எங்குச் சென்றாலும் மகளை உடன் அழைத்துச் சென்று படிக்க வைத்துவருவதாக பதிவில் கூறப்பட்டுள்ளது. சாலை ஓரமாக இருந்தாலும், உயர்மாடி குடியிருப்பு வழித்தடமாக இருந்தாலும், டெலிவரி இடைவேளையாக இருந்தாலும், ஒரு தந்தைக்கு கல்வியே முதன்மை என்பதையே அவர் செயலால் நிரூபிக்கிறார்.
இந்த வீடியோவில் “அல்டிமேட் ஸ்விக்கி அப்பா” எனப் பாராட்டப்படுகிற இவர், கடின உழைப்பையும், தந்தை பொறுப்பையும் ஒரே நேரத்தில் எவ்வாறு சமநிலையில் வகுக்கிறார் என்பதைக் காட்டுகிறது. கஷ்டத்திலும் புன்னகையுடன் மகளுக்குப் படிக்க வைத்து, அவளுக்குத் தாம் முடியாதவற்றை ஓருநாள் கொடுக்க வேண்டும் என்ற கனவைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இந்த தந்தையின் உறுதி சமூக வலைதளங்களில் பலரையும் உருக்குகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!