Morning Headache: காலையில் அடிக்கடி தலைவலி வருகிறதா? இந்த ஊட்டச்சத்து குறைபாடே காரணம்!
TV9 Tamil News December 18, 2025 10:48 PM

குளிர்காலத்தில் (Winter) எழுந்தவுடன் பலருக்கு தலைவலி (Head ache) பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. இந்த வலி சில சமயங்களில் லேசானதாகவும், கடுமையானதாகவோ இருக்கலாம். மேலும், இது நில நேரங்களில் நாள் முழுவதும் நீடிக்கும். இதை புறக்கணிக்கக்கூடாது. ஏனெனில் இது பெரும்பாலும் உங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படலாம். குளிர் காலநிலை உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த ஓட்டத்தை மெதுவாக்குகிறது. இதனால் மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் செல்வது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில், உங்கள் தினசரி உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தாலும், காலையில் தலைவலி ஏற்படலாம். எனவே, தினமும் காலையில் தலைவலி ஏற்பட்டால், உடலுக்கு சரியான ஊட்டச்சத்து மற்றும் சீரான உணவு தேவை என்பதற்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: குளிர்காலத்தில் குறையும் நீர்ச்சத்து.. சிறுநீரக கற்கள் வருவதற்கான அறிகுறிகள் இதுதான்!

காலையில் எழுந்ததும் எனக்கு ஏன் தலைவலி வருகிறது?

காலை தலைவலிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உணவில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததுதான். மெக்னீசியம் குறைபாடு நரம்புகளை அழுத்தத்திற்கு உள்ளாக்கி, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்துகிறது. வைட்டமின்கள் பி2 மற்றும் பி12 மூளைக்கு ஆற்றலை வழங்குகின்றன. இது சரியான நரம்பு செயல்பாட்டை ஊக்குவிக்க தொடங்கும். இந்த வைட்டமின்களின் குறைபாடுகள் காலையில் எழுந்தவுடன் கனத்தையும் வலியையும் ஏற்படுத்தும்.

குளிர்காலத்தில் மக்கள் பெரும்பாலும் குறைவாக தண்ணீர் குடிக்க தொடங்குகிறார்கள். இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுத்து, மூளைக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் விளைவாக தலைவலி ஏற்படுகிறது. மேலும், இரும்புச்சத்து குறைபாடு இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக எழுந்தவுடன் தலைச்சுற்றல் ஏற்படும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இல்லாததால் மூளையில் வீக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது காலை தலைவலியை ஏற்படுத்தும். எனவே சீரான மற்றும் சத்தான உணவு மிகவும் முக்கியமானது.

உணவில் என்ன சேர்க்க வேண்டும்?

காலை தலைவலியைக் குறைக்க உங்கள் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகள் இருக்க வேண்டும். மெக்னீசியத்திற்கு பாதாம், கத்திரிக்காய் மற்றும் வாழைப்பழங்களை எடுத்து கொள்ளலாம். இவை நரம்புகளைத் தளர்த்தி தலை வலியைக் குறைக்கும். முட்டை, பால், தயிர் மற்றும் தானியங்களில் உள்ள வைட்டமின்கள் பி12 மற்றும் பி2 மூளைக்கு உற்சாகத்தை அளித்து காலை சோர்வைப் போக்குகிறது.

ALSO READ: வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாதவை.. இது ஆரோக்கியத்தை கெடுக்கும்..!

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கிறது. வால்நட்ஸ், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு சிறந்த தேர்வுகள், அவை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் தலைவலியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் நீரிழப்பைத் தவிர்க்கவும், காலையில் புத்துணர்ச்சி தொடரவும் தினந்தோறும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.