Health Tips: இளம் வயதிலேயே இதய நோய் பிரச்சனையா? மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
TV9 Tamil News December 20, 2025 06:48 PM

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலரும் இளம் வயதிலேயே இதய நோய் பிரச்சனையை (Heart Disease Problem) எதிர்கொள்கிறார்கள். மேலும் உடல் செயல்பாடு இல்லாத இளைஞர்கள் இடையே இதய நோய் பிரச்சனைகள் உருவாகும் ஆபத்து 2-3 மடங்கு அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேநேரத்தில், ஜிம் சென்று உடற்பயிற்சி (Exercise) மேற்கொண்டு சுறுசுறுப்பாக இருந்தாலும் அல்லது நடைப்பயிற்சி மேற்கொண்டாலும், இதய நோய் உங்களுக்குள் உருவாகலாம். இந்தநிலையில், இளம் வயதிலேயே இதய நோய் பிரச்சனைகள் ஏன் வருகிறது? இது உருவாததற்கான காரணம் என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கலாமா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!

லிப்போபுரோட்டீன்:

லிப்போபுரோட்டீன் இது மிகவும் ஆபத்தான வகை கொழுப்பு. இது வழக்கமான லிப்பிட் சோதனை மூலம் கண்டறியப்படுவதில்லை. இது முற்றிலும் மரபணு சார்ந்தது. உங்கள் LDL சாதாரணமாக இருந்தாலும் கூட இது தமனிகளில் அடைப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் இது மன அழுத்ததாலும் ஏற்படலாம். அதாவது வெறும் ஓடுவது அல்லது ஜிம்மிற்குச் செல்வது மட்டும் மன அழுத்தத்தைக் குறைக்காது. அதிக மன அழுத்தம் அட்ரினலின் அதிகரிக்கிறது. இதனால், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரித்து, இதய தமனிகள் பலவீனமடைகின்றன. இன்றைய வேகமான கார்ப்பரேட் வாழ்க்கை முறை இதயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பலர் வெளியில் ஆரோக்கியமாக தெரியலாம். ஆனால் அவர்களுக்கு உடலுக்குள் வீக்கம் இருக்கும். இந்த வீக்கம் மெதுவாக தமனிகளை சேதப்படுத்துகிறது. இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இது ஒரு எளிய இரத்த பரிசோதனையில் கண்டறியப்படுவதில்லை.

சரியான அளவில் தூக்கம் இல்லாதது:

தினமும் 6 மணி நேரம் தூங்குவது போதாது. நள்ளிரவு வரை மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது டிவியை பயன்படுத்தினாலோ, உடலில் வளர்சிதை மாற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. இது கார்டிசோலை அதிகரிக்கிறது. இதனால், இரத்தம் கெட்டியாகி, மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

ஓடுதல், ஜாகிங் மற்றும் யோகா ஆகியவை உடற்தகுதிக்கு நல்லது. ஆனால் அது உங்கள் தமனிகள் சுத்தமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. இதய நோய் என்பது வாழ்க்கை முறை பிரச்சினை மட்டுமல்ல, மரபணுக்கள், மன அழுத்தம், வீக்கம், தூக்கம் மற்றும் லிப்போபுரோட்டீன் (A) போன்ற பல காரணிகளையும் சார்ந்துள்ளது.

ALSO READ: பலவீனத்தை தரும் இரும்புச்சத்து குறைபாடு.. இந்த 6 சைவ உணவுகள் சரிசெய்யும்..!

மருத்துவர்களின் கூற்றுப்படி 25 வயதிற்குப் பிறகு அனைவரும் சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, லிப்போபுரோட்டீன்(a), HS-CRP (வீக்க சோதனை), ApoB, HbA1c, ஃபாஸ்டிங் இன்சுலின், வைட்டமின் D, ஹோமோசிஸ்டீன், TMT, கரோனரி கால்சியம் ஸ்கோர் போன்ற சோதனைகள் மேற்கொள்வது இதய நோய் பிரச்சனைகளை கண்டறிய உதவி செய்யும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.