இந்தியாவில் உள்ள பொதுமக்கள் வங்கி கணக்கு வைத்து அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு பான் கார்டு (PAN Card) கட்டாயமாக உள்ளது. வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்கு தொடங்க என பல சேவைகளுக்கு பான் கார்டு கட்டாய மற்றும் அடிப்படை தேவையாக உள்ளது. பான் கார்டு இத்தகைய முக்கிய ஆவணங்களின் ஒன்றாக உள்ள நிலையில், 2025 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இதனை செய்து முடிக்கவில்லை என்றால் பான் கார்டு முடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உங்கள் பான் கார்டு முடக்கம் செய்யப்படாமல் இருக்க இதனை கட்டாயம் செய்யுங்கள்.
ஆதார் கார்டு – பான் கார்டு இணைப்பு கட்டாயம்இந்தியாவில் பான் கார்டை போலவே மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). ஆதார் கார்டு இல்லை என்றால் பல விஷயங்களை செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே பான், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டை இணைக்கும் பணிகளை அரசு கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 31, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இரண்டு முக்கிய மாற்றங்களை கொண்டுவந்த EPFO.. இனி ஊழியர்களுக்கு இவற்றில் சிக்கல் இல்லை!
ஆதார் – பான் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்காலக்கெடுக்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு முடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பான் கார்டு முடக்கப்படும் பட்சத்தில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் போய்விடும். எனவே டிசம்பர் 31, 2025-க்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைப்பது மிகவும் பாதுகாப்பானது.
இதையும் படிங்க : PPF : ரூ.3,000 இருந்தால் போதும்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து லட்ச கணக்கில் லாபம் பெறலாம்!
ஆதார் – பான் இணைப்பது எப்படி?