ரயிலில் அநாகரீகம்! – CCTV-யில் சிக்கிய ஜோடி.. வீடியோவை லீக் செய்த ஊழியர் நீக்கம்.. அதிகாரிகள் அதிரடி…!!!
SeithiSolai Tamil December 21, 2025 09:48 PM

மீரட் மற்றும் டெல்லி இடையே இயங்கும் அதிவேக ‘நமோ பாரத்’ (Namo Bharat) ரயிலில், இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் – மோடிநகர் இடையே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, பெட்டியில் ஆட்கள் குறைவாக இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு அந்த ஜோடி எல்லை மீறியுள்ளனர்.

அருகில் மற்ற பயணிகள் அமர்ந்திருந்த போதிலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் (NCRTC) தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மக்கள் தொடர்பு அதிகாரி புனீத் வாட்ஸ், “பொதுப் போக்குவரத்தில் இத்தகைய நடத்தை மிகவும் வெட்கக்கேடானது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு கேமரா காட்சிகளை அத்துமீறிப் பதிவு செய்து இணையத்தில் கசியவிட்ட கட்டுப்பாட்டு அறை ஊழியர் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொள்வது சட்டப்படி குற்றம் என்றும், சம்பந்தப்பட்ட ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.