Health Tips: அதிகப்படியான உடற்பயிற்சி இதயத்திற்கு ஆபத்தானதா? உண்மை என்ன..?
TV9 Tamil News December 23, 2025 05:48 AM

உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க தினசரி உடற்பயிற்சி (Exercise) மேற்கொள்வது முக்கியமானது. தினமும் சிறிதுநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது உடலில் பல வகைகளில் நன்மை பயக்கும். மேலும், பல நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. அதன்படி, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தினசரி உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது. முன்பெல்லாம், உடல் செயல்பாடு இல்லாதவர்களுக்கு மாரடைப்பு (Heart Attack) உள்ளிட்ட இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம்,  ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்திகளை படிக்கிறோம், பார்க்கிறோம். இதனால்தான் பலரும் அதிகப்படியான உடற்பயிற்சி செய்வதால் இதயத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகளால் சிக்கி தவிக்கிறார்கள். அதற்கான, விடையை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ:வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாதவை.. இது ஆரோக்கியத்தை கெடுக்கும்..!

உடற்பயிற்சி உடலுக்கு ஏன் முக்கியம்?

தினமும் நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும். இது சர்க்கரை நோய், எலும்பு நோய்கள், எடை அதிகரிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற பல உடல்நல பிரச்சினைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இருப்பினும், அதிகப்படியான உடற்பயிற்சிகள் அல்லது உடல் செயல்பாடு உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அதிகப்படியான உடற்பயிற்சி ஏன் ஆபத்தானது?

உடற்பயிற்சியின் போது சிறிதுநேர இடைவேளி மற்றும் ஆழமாக மூச்சை இழுத்து விடுதல் போன்றவைகளை மேற்கொள்வது முக்கியம். இது சிறிதுநேரம் உடலுக்கு ஓய்வை கொடுத்து இதயத்தில் கடுமையான அழுத்தத்தைத் தடுக்கிறது. ஒரு நபர் அதிகமாக உடற்பயிற்சி செய்யும் போது, ​​இதயத் துடிப்பு அதிகரிப்பது இயற்கையானது. ஆனால் அது அசாதாரணமாக அதிகரித்தால், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இது சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இதயத்தில் கடுமையான பிரச்சனைகள் உண்டாகும். அதிகப்படியான உடற்பயிற்சிகள் இதய தசைகளைப் பாதித்து அபாயத்தை அதிகரிக்கிறது.

ALSO READ: வாழைப்பழம் சாப்பிட இதுவே சிறந்த நேரம்.. மருத்துவர் சரண் ஜேசி சூப்பர் டிப்ஸ்!

உடற்பயிற்சியின்போது என்ன செய்யலாம்?
  • அதிகமாக உடற்பயிற்சி செய்தால், அதை தவிர்க்க வேண்டும்.
  • உடற்பயிற்சியின்போது உங்கள் உடலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, உடற்பயிற்சி நேரத்தை குறைத்து கொள்வது நல்லது.
  • சிறிது நேரத்திற்குப் பிறகு, படிப்படியாக உங்கள் உடற்பயிற்சி நேரத்தை அதிகரிக்கவும்.
  • நீங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு, உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்றால், தினமும் காலையில் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் போதும்.
  • உடற்பயிற்சிகளுடன், உங்கள் அன்றாட வழக்கத்தில் யோகாவையும் சேர்த்துக் கொள்ளலாம். இது மன மற்றும் உடல் நன்மைகளை வழங்குகிறது.
  • யோகா செய்வது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் ஏற்படுவதை குறைத்து ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.