நிதிக்ஷ்மா என்ற பாஜக பெண் கவுன்சிலர், நகராட்சி கூட்டத்தில் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறியதற்காக மற்ற உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, கேரளாவில் ஒருவிதமான “அச்ச கலாச்சாரம்” நிலவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் தேசபக்தி கோஷங்களை எழுப்புவதற்கு கூட ஒரு மக்கள் பிரதிநிதி அஞ்ச வேண்டிய சூழல் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தவே இத்தகைய போக்கைக் கடைபிடிப்பதாகவும் பாஜக தலைவர்கள் சாடியுள்ளனர்.
“>
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைமை, தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் இத்தகைய எதிர்ப்புக்கள் அமைவதாகத் தெரிவித்துள்ளது. நகராட்சி கூட்டத்தில் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறியது தவறு என்பது போலச் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இது கேரளாவின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சி என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கேரள அரசியல் களத்தில் தேசியவாதம் மற்றும் மதச்சார்பின்மை குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.